650 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

பவானியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி சார்பில் 650 பேருக்கு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

பவானியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி சார்பில் 650 பேருக்கு நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
 விழாவுக்கு, பவானி நகரச் செயலர் ப.சீ.நாகராஜன் தலைமை வகித்தார். மாநில மாணவரணி துணைச் செயலர் பி.ஆர்.எஸ்.ரங்கசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கே.சரவணன் வரவேற்றார். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலர் என்.நல்லசிவம், 650 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஏ.சேகர், பவானி ஒன்றியச் செயலர் துரை,  மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன், நகரத் தலைவர் பி.மாணிக்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com