100 சதவீதத் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
10-ஆம் வகுப்புத் தேர்வில் சத்தியமங்கலம் லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
 இப்பள்ளி மாணவி பூரணி 497 மதிப்பெண்களும், மனோஜ் 496 மதிப்பெண்களும், ஸ்ரீதேவி 495 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். பள்ளியில் தேர்வெழுதிய 109 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஒய்ஸ்மென் சங்கத் தலைவர் ஜெய்சங்கர், முன்னாள் தலைவர் தவமணி சந்திரசேகரன், செய்தித் தொடர்பாளர் கணேஷ், முன்னாள் மண்டல இயக்குநர் பாஸ்கோ இறையன்பு உள்ளிட்டோர் பாராட்டினர்.

நந்தா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
10-ஆம் வகுப்புத் தேர்வில் ஈரோடு நந்தா மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
 இப்பள்ளியில் தேர்வு எழுதிய 64 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் என்.சரவணகுமார் 500-க்கு 494 மதிப்பெண்களும், கார்த்திக் 492 மதிப்பெண்களும், மாணவி காயத்திரி 490 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
 490-க்கு மேல் 3 பேரும், 480-க்கு மேல் 12 பேரும், 475-க்கு மேல் 17 பேரும், 450-க்கு மேல் 29 பேரும், 400-க்கு மேல் 42 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.   கணிதப் பாடத்தில் 3 பேரும், அறிவியல் பாடத்தில் 3 பேரும், சமூகஅறிவியல் பாடத்தில் 7 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வெ.சண்முகன், செயலர் திருமூர்த்தி, பள்ளி முதல்வர் கணேஷ் ஆசிரியர்கள் பாராட்டினர்.

சாகர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
பெருந்துறை சாகர் வித்யா பவன் பள்ளி மாணவர்கள், 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
 மாணவி ப.செ.சங்கமித்ரா 500-க்கு 496 மதிப்பெண்களும், ச.ராதிகா 495 மதிப்பெண்களும், மு.க.அபினந்தனா 492 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மேலும், 12 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.ஹ வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பள்ளித் தாளாளர் சி.செளந்திரராசன், அறக்கட்டளை உறுப்பினர்கள், முதல்வர் அரசுபெரியசாமி, துணை முதல்வர் ராதாமனோகர், கல்வி இயக்குநர் முரளிகிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


விவேகானந்தா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
முத்தூர் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், இப்பள்ளியில் பயின்ற 200 மாணவ, மாணவியரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைவர் சண்முகம், செயலாளர் சக்திவேல், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.

நவரசம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
மொடக்குறிச்சியை அடுத்த பள்ளியூத்து நவரசம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். கணிதத்தில் 3 பேரும், அறிவியலில் 15 பேரும், சமூக அறிவியலில் 18 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைவர் பழனிசாமி, செயலாளர் குமாரசாமி, பொருளாளர் பொன்னுவேல், கல்லூரித் தலைவர் தாமோதிரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com