அரசு பாலிடெக்னிக்கில் விண்ணப்பம் விநியோகம்

பெருந்துறை, கோவை - சேலம் புறவழிச் சாலை, துடுப்பதி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பெருந்துறை, கோவை - சேலம் புறவழிச் சாலை, துடுப்பதி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக்கில் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கும், 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களும் வழங்கப்படுகிறது.
 சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலான ஐந்து டிப்ளமோ பாடப் பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பம் தற்போது வழங்கப்படுகிறது. பி.சி., எம்.பி.சி., மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 150. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தங்களது சாதிச் சான்றிதழ் நகலை அளித்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம். மே 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com