குளம், ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

குளம், ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குளம், ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வேளாண் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் வேளாண் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:
மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தென்னை மரங்கள் மூன்றில் ஒரு பங்கு காய்ந்துவிட்டன. பவானிசாகர் அணையில் 2.5 டிஎம்சி தண்ணீர் உள்ளது. மேலே உள்ளே மின் அணைகளில் 10 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீரை கீழே கொண்டு வந்து கீழ்பவானி, கொடிவேரி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில்விட வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதை அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள் தூர்வாரும் பணிகளை 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் தொழிலாளர்களைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும். மேலும், அடுத்த 10 நாள்களில் பருவமழை பெய்ய இருப்பதால் குடிமராமத்துப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
வறட்சியால் காய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாசனக் கிணறுகளைத் தூர்வார அரசு நிதி அளிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய வேளாண் பொருளாக விளங்கும் மஞ்சள் 6 மாத காலமாக அடிமாட்டு விலைக்கு ரூ. 6 ஆயிரம் முதல் தற்போது ரூ. 5 ஆயிரத்துக்கு விற்பனை ஆகி வருகிறது.
ஆந்திர அரசு விவசாயிகளைக் காக்கும் வகையில் 6.5 லட்சம் குவிண்டாலை ரூ. 200 கோடி அரசு ஒதுக்கி ரூ. 6 ஆயிரத்து 500 விலை நிர்ணயம் செய்து மஞ்சளைக் கொள்முதல் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதுபோல மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க ஆட்சியரின் ஆணைப்படி  உரிய இடத்தில் விவசாயிகள் மண் எடுக்காமல் பிற பகுதிகளில் எடுப்பதால் பிரச்னை ஏற்படுகிறது.
ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். கனிராவுத்தர் குளம் தூர்வாரும் பணியை பொதுமக்கள் பங்களிப்புடன் கடந்த 45 நாள்களாக செய்து வருகின்றனர். ரூ. 2 கோடியை விடுவித்து குளம் மீட்பு இயக்கத்துக்கு வழங்கினால் நீர்சேமிப்புக்கும், பொழுதுபோக்கு மையமாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com