மூதாட்டி கொலை வழக்கு: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் தற்கொலை முயற்சி

கொடுமுடி அருகே உள்ள கரட்டப்பாளையத்தில் மூதாட்டி கொலை வழக்கில் காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளபட்டவர், தற்கொலை முயற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.

கொடுமுடி அருகே உள்ள கரட்டப்பாளையத்தில் மூதாட்டி கொலை வழக்கில் காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளபட்டவர், தற்கொலை முயற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.
 கொடுமுடி அருகே கரட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (73). இவர், ஜனவரி 13-ஆம் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இந்தக் கொலை வழக்கில் துப்புத் துலங்காமல் இருந்து வந்தது. கொலை வழக்கு சம்பந்தமாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
 இந்நிலையில், கொலை வழக்குத் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (20)  என்பவர் மீது தனிப்படை காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், காவல் துறையினர் சதீஷை கண்காணித்து வந்தனர்.
 சதீஷ் டிப்ளமோ படித்து இடையில் நின்றவர். பட்டுக்கோட்டையில் இருந்து சதீஷின் வங்கி கணக்குக்கு ரூ. 2,000, 3000 என பணம் போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், காவல் துறையினருக்கு சதீஷின் மீது சந்தேகம் அதிகரிக்கத் தொடங்கியது.
 இதையடுத்து, சதீஷீடமும், பட்டுகோட்டையிலிருந்து சதீஷுக்கு பணம் போட்டவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த நபர் சதீஷ் ஏழை மாணவர் என்பதால் அவருக்குப் பணம் அனுப்பியதாகத் தெரிவித்தார்.
 இந்நிலையில், விசாரணைக்கு வந்து சென்று கொண்டிருந்த சதீஷை திடீரென காணவில்லை. இதையடுத்து, திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சதீஷின் மாமா பரமசிவத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 விசாரணையில், சதீஷை எங்கிருந்தாலும் அழைத்து வரவேண்டும், இல்லையென்றால் மூதாட்டியை நான்தான் கொன்றேன் என்று எழுதித் தருமாறு பரமசிவத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனமுடைந்த பரமசிவம் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை காலையில் விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் பரமசிவத்தை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில் பரமசிவத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 மூதாட்டியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதால்தான் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com