கூட்டுறவு வார விழா 14-இல் தொடக்கம்

ஈரோட்டில் கூட்டுறவு வார விழா நவம்பர் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

ஈரோட்டில் கூட்டுறவு வார விழா நவம்பர் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
 ஈரோடு மாவட்டத்தில் 64-ஆவது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழா நவம்பர் 14 முதல் 20-ஆம் தேதி வரை 7 நாள்கள் கொண்டாடப்படவுள்ளது என கூட்டுறவு வார விழாக் குழுத் தலைவரும், ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித்  தலைவருமான கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் கூட்டுறவுக் கொடியேற்றுதல், உறுதிமொழி வாசித்தலுடன் விழா நவம்பர் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.  முதல்நாள் விழாவாக, கூட்டுறவுகள் மூலம் நல்லாளுகையும் தொழில் முறையாக்கமும்  என்ற தலைப்பில் கொண்டாடப்படும். நவம்பர் 15-ஆம் தேதி  மாலை 3 மணியளவில்  மாவட்ட அளவிலான விழா "உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்' என்ற தலைப்பில் நடைபெறும்.
 இவ்விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் செங்கோட்டையன்,  கருப்பணன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
 நவம்பர் 16-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில்,  கூட்டுறவு மேம்பாட்டுக்கு வழிகோலும் சட்டம் இயற்றல் நாளாக ரத்த தான முகாம்  நடைபெறவுள்ளது. நவம்பர் 17-ஆம் தேதி பொதுத் துறையிலும்,  தனியார் துறையிலும் கூட்டுறவின் கூட்டாண்மை  நாளாக சென்குமார் நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.  
 நவம்பர் 18-ஆம் தேதி தொழில்நுட்ப விழிப்புணர்வு, "ரொக்கமில்லாப் பரிவர்த்தனை மூலம் நிதியுள்ளடக்களில் கூட்டுறவுகளின் பங்கு' என்ற தலைப்பில் கூட்டுறவு விழிப்புணர்வுக் கூட்டமும்,  நவம்பர் 19-ஆம் தேதி காலை 8 மணிக்கு "கூட்டுறவுகள்' என்ற தலைப்பில் அய்யம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில்  கால்நடை சிகிச்சை முகாமும்,  11 மணிக்கு பெஜலட்டி நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது.
 நவம்பர் 20-ஆம் தேதி (திங்கள்கிழமை) "திறன் மேம்பாட்டில் முதன்மைப் பங்காளராகக் கூட்டுறவு' என்ற தலைப்பில் பவானி வேளாண்ம உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், பவானி நகராட்சி அலுவலக வளாகம்,  நகராட்சி பூங்கா ஆகிய இடங்களில் மரம் நடும் விழா நடைபெறவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com