முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா, பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா, பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  இக்கோயில் தேர்த் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. நவம்பர் 1-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடைபெற்று வந்தன. தினமும் காலை 6 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 அதைத் தொடர்ந்து, பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள் பூசி தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். தலவுமலை, வடுகபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து மாரியம்மனை திங்கள்கிழமை இரவு வழிபட்டனர். கிராம சாந்தி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. தொடர்ந்து, அம்மன்கோவில்புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள் காவடி எடுத்து வந்து வழிபாடு நடந்தினர்.  
 புதன்கிழமை இரவு காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து, மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை
நடைபெற்றது. கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் காவடி எடுத்து வந்து மாரியம்மனை இரவு 11 மணிக்கு வழிபட்டனர். காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, மாவிளக்கு பூஜை அதிகாலை 2 மணிக்கு நடத்தினர்.
 வியாழக்கிழமை காலை 7 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகாஅபிஷேகமும், காலை 7.30 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலிகொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
 தேரோட்டத்தையொட்டி, முருங்கத்தொழுவு சுற்றுப் பகுதியில் உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாலை 3 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். மாலை 4 மணிக்கு தேர் நிலைசேர்ந்தது. இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மதியம் (நவம்பர் 10) மஞ்சள்நீர் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com