ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ. 12 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ. 12 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ. 12 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
இப்பணிகளை ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம்  எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிகளுக்கு, கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமை வகித்தார். கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாடு நிதியில் இருந்து இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி,  தில்லைநகரில் ரூ. 2  லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு, குடிநீர்த் தொட்டி,  40 இடங்களில் குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இதேபோல, தலா ரூ. 2 லட்சம் செலவில் கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி, 13-ஆவது வார்டு 50  அடி சாலை, மாரியம்மன் கோயில் வீதி ஆகியவற்றில் ஆழ்துளைக் கிணறு,  குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
 வைராபாளையம் பட்டேல் வீதியில் ரூ. 4 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறுடன் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது. இத்திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில்,  ஈரோடு கோட்டாட்சியர் ஆர்.நர்மதாதேவி, மாநகராட்சி உதவி ஆணையர் சீனி அஜ்மல்கான்,  வட்டாட்சியர் ஜெயகுமார், பகுதிச் செயலர்கள் ஏ.ஆர்.ஜெகதீசன்,  முருகுசேகர்,  ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com