பழங்குடியின விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பழங்குடியின விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின விவசாயிகள் இலவச மின் இணைப்பு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை விடுத்த செய்தி:
தாட்கோ மூலம் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் பழங்குடியினர் விவசாயியாக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இத்திட்டம் குறித்த விவரங்களை தாட்கோ இணையதள முகவரி ட்ற்ற்ல்://ச்ஹள்ற்.ற்ஹட்க்ஸ்ரீர்.ஸ்ரீர்ம் இல் அறிந்து கொள்ளலாம். பயன்பெற விரும்புவோர் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் குறித்த விவரங்களுடன் சாதிச் சான்று, குடும்ப அட்டை, வருமானச் சான்று, கல்வித் தகுதி, வயதுக்கான ஆதாரச் சான்று குறிப்பிட்டு, விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா, சிட்டா அடங்கல் நகல், 'அ' பதிவேடு நகல், நிலத்தின் வரைபடம்,
சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல், கிணறு அமையப் பெற்றுள்ள கிராமம், சம்பந்தப்பட்ட மின் வாரிய கோட்டம் ஆகிய விவரங்களுடன் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ. 20 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com