டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

ஈரோடு, கங்காபுரம் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் தீபாவளி சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

ஈரோடு, கங்காபுரம் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் தீபாவளி சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
இந்த ஜவுளிச் சந்தையில் 1,500-க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் உள்ளன. இங்கு உற்பத்தியாளர்கள் நேரடியாக கடை அமைத்துள்ளதால் ஜவுளிகள் மலிவான விலையில் கிடைக்கிறது. துணிகள்,  ஆயத்த ஆடைகள், போர்வைகள், உள்ளாடைகள், லுங்கிகள், வேட்டிகள், சேலைகள்,  குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள், நைட்டிகள், உள்பாவாடைகள் உள்பட அனைத்து ஜவுளி ரகங்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தீபாவளி பண்டிகையையொட்டி இச்சந்தையில் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.  இதற்காகப் புதிய ஜவுளி ரகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள், இளம் பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கவரும் வகையில் புதிய மாடல் ரக ஜவுளிகள் உள்ளன.
இந்த ஆடைகளை வாங்குவதற்காக தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்துசெல்கின்றனர். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் ஜவுளி வாங்கும்போது, குழந்தைகளுக்கு பொழுதுபோக்கும் வகையில் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான உணவுகளும் இங்குள்ள உணவகத்தில் உள்ளன.
வாடிக்கையாளர்கள் வந்துசெல்ல இலவச பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி கண்காட்சி அக்டோபர் 7 முதல் மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியில் ஜவுளிகள், சமையல் பொருள்கள், நகைகள்,  உணவு வகைகள் இடம்பெறும் என்று டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை இயக்குநர் டி.பி.குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com