பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.35 கோடிக்கு புதன்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்றது.
பெருந்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள் 5, 179 மூட்டைகளில் 2,30,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 104.30-க்கும், அதிகபட்சமாக ரூ. 115-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 41.10 - க்கும், அதிகபட்சமாக ரூ. 102.65 - க்கும் விற்பனையானது.
இதில், ரூ. 2.35 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக சங்கத் தலைவர் அருள்ஜோதி கே.செல்வராஜ் தெரிவித்தார்.