போலீஸாருக்கு பேரிடர் வெள்ள மீட்பு மேலாண்மைப் பயிற்சி

தமிழ்நாடு காவல்துறையின் சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி சார்பில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் போலீஸாருக்கான

தமிழ்நாடு காவல்துறையின் சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி சார்பில், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் போலீஸாருக்கான பேரிடர் வெள்ள மீட்பு மேலாண்மைப் பயிற்சி  ஈரோடு ஆயுதப் படை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 37 போலீஸாரும்,  நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 32 போலீஸாரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சென்னை கமாண்டோ பயிற்சிப் பள்ளி ஆய்வாளர் மனோகரன், 3 போலீஸார் பயிற்சி அளித்தனர்.
வெள்ளம், ஆபத்தான நேரங்களில் போலீஸார் எவ்வாறு துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் மூலமும், ஈரோடு ஹோட்டல் கிளப் மேலாஞ்சில் உள்ள நீச்சல் குளத்திலும் போலீஸார் பயிற்சி கொடுத்தனர்.  இதைத் தொடர்ந்து ஆயுதப் படை வளாகத்தில் நடைபெற்ற  நிறைவு விழாவில், ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வடுகம் இரா.சிவகுமார், பயிற்சியில் ஈடுபட்ட போலீஸாருக்கு அறிவுரை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com