வரட்டுப்பள்ளம் அணையின் உபரிநீர்: தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரி நீர் வெளியேறுவதால் மலைக் கிராமமான காக்காயனூருக்குச் செல்லும் சாலையில் உள்ள ஓடையின் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்துச் செல்கிறது.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து உபரி நீர் வெளியேறுவதால் மலைக் கிராமமான காக்காயனூருக்குச் செல்லும் சாலையில் உள்ள ஓடையின் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்துச் செல்கிறது.
பர்கூர் மலைப் பகுதியின் அடிவாரத்தில் அடர்ந்த வனத்துக்குள் உள்ளது காக்காயனூர் கிராமம். பெரும்பாலும் மலைமக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தற்போது பர்கூர் மலைப் பகுதியில் பரவலாக கன மழை பெய்து வருவதால் புதிதாக நீர்வீழ்ச்சிகள், ஓடைகள் உருவாகி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
 இதனால், மலைப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி தற்போது உபரிநீர் வெளியேறி வருகிறது. மழையின் போக்கைப் பொருத்து உபரிநீர் ஓடையில் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. இதனால், பெருக்கெடுக்கும் மழை வெள்ளம் காக்காயனூர் மலைக் கிராமத்துக்குச் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள ஓடையின் தரைப்பாலத்தை மூழ்கடித்துச் செல்கிறது.
 தரைப்பாலத்தில் வெள்ளநீரைக் கடந்து மறுபுறம் செல்ல வேண்டிய நிலையில் இக்கிராம மக்கள் உள்ளனர். வெள்ளம் எப்போது அதிகரிக்கும் என்பது தெரியாமல் அச்சத்தில் இப்பகுதி மக்கள் தரைப்பாலத்தைக் கடக்கின்றனர். மழை வெள்ளத்தால் இக்கிராமத்துக்கு வழக்கமாகச் செல்ல வேண்டிய அரசுப் பேருந்து போக்குவரத்தும் கடந்த இரு நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
 எனவே, தங்கள் கிராமத்துக்குத் தடையின்றிச் சென்றுவர உயர்மட்டப் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காக்காயனூர் மலைக் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com