பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வு: 5,247 பேர் எழுதினர்

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை 5,247 எழுதினர். 1,110 பேர் தேர்வு எழுதவில்லை.ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில்,

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை 5,247 எழுதினர். 1,110 பேர் தேர்வு எழுதவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான நேரடி நியமன எழுத்துத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. ஈரோட்டில் 16 மையங்கள், பவானியில் 1 மையம் என 17 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை எழுத 42 மாற்றுத் திறனாளிகள், 2 கண் பார்வையற்றவர்கள் உள்பட 6,357பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில், 5 ஆயிரத்து 247 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 1,110 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இத்தேர்வைக் கண்காணிக்க 17 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 17 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 17 துறை அலுவலர்கள், 17 கூடுதுல் துறை அலுவலர்கள், 356 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல, தேர்வு மையத்தில் போலீஸார், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்வர்கள் உடல் சோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பார்வையிட்டார். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com