"காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி பவானிசாகர் அணையில்நீர்ப்பங்கீடு செய்ய வலியுறுத்தல்'

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி,  பவானிசாகர் அணையில் நீர்ப்பங்கீடு செய்ய வேண்டும் என்று கீழ்பவானி நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி,  பவானிசாகர் அணையில் நீர்ப்பங்கீடு செய்ய வேண்டும் என்று கீழ்பவானி நலச் சங்கத் தலைவர் செ.நல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.  கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் அவசரக் கூட்டம்  ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் நல்லசாமி தலைமை வகித்தார்.  சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி,  கண்ணுசாமி,  முருங்கத்தொழுவு ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதுகுறித்து நல்லசாமி கூறியதாவது:  பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை.  அணையில் தற்போது 14.5 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழைப்பொழிவு திருப்திகரமாக உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஏற்கெனவே உள்ள அட்டவணைப்படியும்,  காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படியும் தண்ணீர் திறக்க வேண்டும்.
குறிப்பாக,  பழைய பவானி பாசனங்களுக்கு நெல்லுக்குத் தண்ணீர் திறக்கும்பட்சத்தில் கீழ்பவானிக்கும் தண்ணீர் திறக்க வேண்டும்.  நீர்ப்பங்கீடு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பான 28:8 என்ற விகிதாசார அடிப்படையில் இருக்க வேண்டும்.
இதில்,  மாற்றம் ஏற்பட்டால் காவிரி நடுவர் மன்றத்  தீர்ப்புக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்.  மேலும் பாசனப் பகுதிகளில் பந்த் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக பவானிசாகர் அணையின் நீர் நிர்வாகத்தை அரசு நடத்தக் கூடாது. அரசின் தவறான நீர் நிர்வாகம் காரணமாகவே விவசாயிகளுக்கு  இடையே மோதல் போக்கு ஏற்படுகிறது.  இதைத் தடுக்கும் வகையில் தண்ணீர்த் திறப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com