மாவட்ட திறனாய்வுப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ஈரோடு அரசு ஐ.டி.ஐ. சார்பில் மாவட்ட அளவிலான திறனாய்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ஈரோடு அரசு ஐ.டி.ஐ. சார்பில் மாவட்ட அளவிலான திறனாய்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்தி:
மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டவும், தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த எண்ணங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஒரு களத்தை ஏற்படுத்தவும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில் முதல்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட அளவில் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்பு, மாநில அளவில் கலந்துகொள்வதற்கு மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் திறனாய்வுப் போட்டிகள் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய மூன்று துறைகளில் நடத்தப்படவுள்ளது.
இப்போட்டிகளில் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், கலை, அறிவியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், தொழிற்சாலைகளில் தொழில் பழகுநர்களாகப் பயிற்சி பெறுவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், குறுகிய கால பயிற்சிகள் மூலம் திறன் பெற்றோர், அமைப்பு
சாரா தொழில்களில் பணி
அனுபவம் பெற்ற திறனுடையோர் ஆகியோர் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர்  இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
இப்போட்டிகளில் கலந்துகொண்டு முதலிடம் பெருவோர்க்கு மாவட்ட ஆட்சியரால் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், இவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகளில் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.
இப்போட்டிகளைப் பார்வையிட பெரிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிலதிபர்கள் வருகை தர உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், தொழிற்சாலைப் பணியாளர்கள், தொழில் பழகுநர்கள் போட்டிகளில் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்துவதன் மூலம் நல்ல வாய்ப்புகளைப் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com