செல்வ மாகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா

கொடுமுடியில் உள்ள செல்வ மாகாளியம்மன் கருப்பண்ண சுவாமி  கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது.         

கொடுமுடியில் உள்ள செல்வ மாகாளியம்மன் கருப்பண்ண சுவாமி  கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது.         
 ஆண்டுதோறும் சித்திரை மாதங்களில் பூசாரி அரிவாள் மீது ஏறி சாமி ஆடி வரும் நிகழ்ச்சியும், திரு ஆபரணப் பெட்டி சுமந்து வருதல் நிகழ்ச்சியும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை இரவு காவிரி ஆற்றில் இருந்து மேளவாத்தியம், பம்பை இசை முழங்க 16 1/2 அடி நீளமுள்ள அரிவாள் மீது பூசாரி ஏறி சாமி ஆடியும், திரு ஆபரணப் பெட்டி சுமந்து கொண்டும் காவிரி ஆற்றில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, மகுடேஸ்வரர் கோயில், சந்தை வீதி வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தனர்.
 அதைத் தொடர்ந்து, சுயம்பு காவல் கருப்பண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 
 ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com