ஆச​னூர் வனப் பகு​தி​யில் புலி நட​மாட்​டம்: வாகன ஓட்டி​கள் அச்​சம்

ஆச​னூர் வனப் பகு​தி​யில் புலி நட​மா​டு​வ​தால் வாகன ஓட்டி​கள் அச்​ச​ம​டைந்​துள்​ள​னர்.

ஆச​னூர் வனப் பகு​தி​யில் புலி நட​மா​டு​வ​தால் வாகன ஓட்டி​கள் அச்​ச​ம​டைந்​துள்​ள​னர்.
சத்​தி​ய​மங்​க​லம், புலி​கள் காப்​பக வனப் பகு​தி​யில் புலி, சிறுத்தை, யானை, காட்டெ​ருமை, கழு​தைப் புலி, மான், செந்​நாய், கரடி உள்​ளிட்ட பல்​வேறு வகை​யான வன விலங்​கு​கள் உள்​ளன. சத்​தி​ய​மங்​க​லத்தை அடுத்​துள்ள புது​வ​ட​வள்​ளி​யி​லி​ருந்து இரு​மா​நில எல்​லை​யான காரப்​பள்​ளம் வரை சாலை​யின் இரு​பு​ற​மும் உள்ள அடர்ந்த வனப் பகு​தி​யி​லி​ருந்து வன​வி​லங்​கு​கள் அவ்​வப்​போது குடி​நீர், தீவ​னம் தேடி சாலை​யைக் கடந்து செல்​வது வழக்​கம்.  
தற்​போது மலைப் பகு​தி​க​ளில் சாரல் மழை பெய்து வரு​வ​தால் வறட்சி நீங்கி ஆச​னூர் வனப் பகு​தி​யில் காரப்​பள்​ளம் முதல் புளிஞ்​சூர் வரை சாலை​யோ​ரத்​தில் புற்​கள் பசு​மை​யாக வளர்ந்​துள்​ள​தால் காலை, மாலை வேளை​க​ளில் புற்​க​ளைத் தின்​ப​தற்கு மான்​கள் கூட்டம் கூட்ட​மாக வரும்.
இந்​நி​லை​யில், மான்​கள் கூட்ட​மாக வரும் என்​ப​தால் அவற்றை வேட்டை​யா​டு​வ​தற்​காக புலி ஒன்று அப்​ப​கு​தி​க​ளில் சுற்​றித் திரிந்​துள்​ளது. இதனை, அவ்​வ​ழியே சென்ற வாகன ஓட்டி​கள் வாக​னத்தை நிறுத்​தி​விட்டு செல்​லி​டப்​பே​சி​யில் படம் பிடித்​துள்​ள​னர். புலி​கள் யானை​க​ளைப்​போல அல்​லா​மல் ஆபத்து என்று உணர்ந்​தாலே மனி​தர்​க​ளைத் தாக்​கி​வி​டும்.
 எனவே, புலி போன்ற வன விலங்​கு​க​ளைக் கண்​டால் வாக​னத்தை நிறுத்த வேண்​டாம் என வனத் துறை​யி​னர் எச்​ச​ரிக்கை வி​டுத்​துள்​ள​னர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com