கீழ்பவானி பாசனத்துக்கு 2 நாள்கள் இடைவெளி விட்டு நீர் விநியோகம்

கீழ்பவானி பாசனத்துக்கு 2 நாள்கள் இடைவெளிவிட்டு நீர் விநியோகம் செய்யப்படுவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கீழ்பவானி பாசனத்துக்கு 2 நாள்கள் இடைவெளிவிட்டு நீர் விநியோகம் செய்யப்படுவது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய 4 பிரிவுகளில் பாசன வசதிகள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பாசனத்துக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. சென்ற ஆண்டில் பருவமழை ஓரளவு கைகொடுத்ததன் காரணமாக கீழ்பவானி ஒற்றை மதகுப் பகுதி பாசனத்துத்து அக்டோபர் 5 முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் இரட்டைப் படை மதகில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஜூலை மாதம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கீழ்பவானி ஒற்றைப் படை மதகு, குறிப்பிட்ட இரட்டைப் படை மதகுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கேரளத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதுடன், உபரி நீர் சுமார் 70 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி வரை தண்ணீர் செல்கிறது. பவானிசாகர் அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இருந்தபோதிலும், கீழ்பவானி பாசனத்துக்கு 2 நாள்கள் இடைவெளிவிட்டு தண்ணீர் திறக்கப்படுவதால் பணிகள் பாதிப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கீழ்பவானி பாசன விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில் பவானிசாகர் அணையில் தண்ணீர் இல்லாததால் சுழற்சி முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு பவானிசாகர் அணை முழு கொள்ளளவு எட்டியதுடன், கடந்த சில நாள்களாக உபரி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. 
இந்நிலையில், நெல் பயிருக்கு 120 நாள்கள் வரை தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், கீழ்பவானி வாய்க்காலில் சென்னசமுத்திரம், ஊஞ்சலூர் உள்ளிட்ட பல இடங்களில் பாசனப் பகுதியில் 2 நாள்கள் இடைவெளிவிட்டு தண்ணீர் திறக்கின்றனர். இதனால், நாற்று விடுவதிலும், வயல் பரப்பை சமன் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இவ்வளவு தண்ணீர் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் நேரடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com