பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
 அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு, கள்ளுக்கடைமேட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல்கள் 3 மாதத்துக்கு ஒருமுறை திறந்து காணிக்கை எண்ணப்படுகிறது. குண்டம் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது.
 அறநிலையத் துறை துணை ஆணையர் முருகையா, ஆய்வாளர் பாலசுந்தரி முன்னிலையில் 3 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 820 தொகை பணமும், 16 கிராம் தங்கமும், 7 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரியவந்தது.
உண்டியல் எண்ணிக்கையில் பரம்பரை அறங்காவலர் தங்காயம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com