மொடக்குறிச்சி அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
 மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம், புதுவலசு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரு ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் சரிவர இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் மேல்நிலைத் தொட்டி மூலமும், காவிரி குடிநீர் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் லக்காபுரம், புதுவலசு பகுதிக்கு பல்வேறு காரணங்களால் குடிநீர்ப் பிரச்னை தொடர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.  
 இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலமுறை மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், லக்காபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையையும் எடுக்க அதிகாரிகள் முன்வராததால் செவ்வாய்க்கிழமை காலை 11மணியளவில் திடீரென ஈரோடு -  முத்தூர் சாலையில், லக்காபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து விரைந்து வந்த மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, வட்டாட்சியர் ஜெயகுமார், மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் (பொ) முருகன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
 அதில், ஒருவார காலத்துக்குள் பழுதடைந்த மோட்டார்கள் பழுது பார்க்கப்படும். உடைந்த குழாய் இணைப்புகள் புதுப்பிக்கப்படும். குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com