தரமற்ற உணவுப் பொருள் விற்ற வணிகர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

சத்தியமங்கலத்தில் தரமற்ற உணவுப் பொருள் விற்ற குற்றத்துக்காக மளிகைக் கடை, உணவக உரிமையாளர் ஆகிய இருவருக்கு சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் தரமற்ற உணவுப் பொருள் விற்ற குற்றத்துக்காக மளிகைக் கடை, உணவக உரிமையாளர் ஆகிய இருவருக்கு சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒரு நாள் சிறைத் தண்டனை, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உணவுப் பொருள்கள் விற்கும் கடை உரிமைதாரர்கள்  உரிமம் பெற வேண்டும் என தமிழக அரசு தீவிர முனைப்புகாட்டி வருகிறது.
அதன்படி, சத்தியமங்கலம் உணவுப் பாதுகாப்பு அலுவலர் ச.கேசவராஜ் நகராட்சிப் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது மைசூரு சாலை காயத்திரி உணவகம் உரிமம் இன்றியும் தரம் குறைந்த பால் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதேபோல சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர் அதற்குரிய உரிமம் பெறாமலும், தரமற்ற உணவுப் பொருள் விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு சட்டப்படி இரு வணிகர் மீது சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கே.குமாரசிவம், உரிமம் பெறாத வணிகம் செய்த காய்த்திர பவம் உணவக உரிமையாளர் செந்தில்குமாருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபராதமும், அத்தாணி சாலையில் உள்ள மளிகைக் கடை உரிமையாளருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com