ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு

ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 கருத்தரங்குக்கு, வேளாளர் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். 
தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி, பொருளாளர் பி.கே.பி.அருண், உறுப்பினர் சி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டி.கமலவேணி வரவேற்றார். 
 கருத்தரங்கில், கணிதத் துறை வல்லுநர்களான மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 
ஆஸ்கார் கேஸ்டிலோ, புல்கரியாவைச் சேர்ந்த லயூப்கா அடானாசோவா, வாசிய அடானாசோவா, தெற்கு கொரியாவைச் சேர்ந்த டேக்யான் கிம், அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கணிதத் துறையின் பயன்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினர்.
 இதில், தமிழகம், கேரளம், பஞ்சாப்,  மேற்குவங்கம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கணிதம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முன்னதாக, கருத்தரங்கு மலர் வெளியிடப்பட்டது.
 இதில், கல்லூரியின் கணிதத் துறைத் தலைவர் ஆர்.பார்வதி, பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உதவிப் பேராசிரியர் எஸ்.பி.கீதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com