பொங்கல் விழா

பெருந்துறையை அடுத்த சீனாபுரம் ரிச்மாண்ட் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

ரிச்மாண்ட் பள்ளியில்...
பெருந்துறையை அடுத்த சீனாபுரம் ரிச்மாண்ட் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
 விழாவுக்கு, பள்ளித் தலைவர் டி.கே.முத்துசாமி தலைமை வகித்தார். தாளாளர் கே.கே.முத்துசாமி, செயல் இயக்குநர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெட்ரிக் பள்ளி முதல்வர் சண்முகம் வரவேற்றார். 
 விழாவையொட்டி, பள்ளி எங்கும் தோரணமிட்டு, வண்ணக் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, மாணவ, மாணவிகள் ஆடிப்பாடி கும்மியடித்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ராபர்ட் கென்னடி நன்றி கூறினார். 

வேளாளர் கல்வி நிறுவனங்களில்...

வேளாளர் கல்வி நிறுவனங்களில் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவிகள் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. மாணவிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், மெக்சிகோவைச் சேர்ந்த பேராசிரியர் ஆஸ்கர் காஸ்டிலோ, பல்கேரியாவைச் சேர்ந்த டாக்டர் லுபக்கா அடனசோவா டோகோவேஸ்கோ, வேஸியா அடனாஸோவா, தென்கொரியாவைச் சேர்ந்த பேராசிரியர் டேக்யூன்கிம் ஆகியோர் பங்கேற்றனர். பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். 
 இதில், கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், கல்லூரி முதல்வர் கமலவேணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல வேளாளர் நர்சிங் கல்லூரி, வேளாளர் பி.எட். கல்லூரியிலும் மாணவிகள் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில்...
பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
 விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கே.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். குமரகுரு வேளாண் கல்வி நிறுவன முதல்வர் ரவிகுமார் தியோடர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சக்தி சர்க்கரை ஆலை முதுநிலைப் பொது மேலாளர் என்.செழியன் பங்கேற்று பொங்கல் விழா குறித்து விளக்கிப் பேசினார். 
 சிறப்பு அழைப்பாளர்களாக முதுநிலைப் பொது மேலாளர் மு.சுதாகர், துணைப் பொது மேலாளர் பி.அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழரின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகளான உரியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 இதில், ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில்...
சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
 விழாவுக்கு, கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்தார். முதல்வர் பி.செங்குட்டுவன் முன்னிலை வகித்தார்.
 விழாவில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com