ஈரோடு மாவட்டத்தில் ரூ. 6.77 கோடி மதிப்பில் பொங்கல் பொருள்கள் விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 6 கோடியே 77 லட்சத்து 77 ஆயிரத்து 472 மதிப்பில் பொங்கல் பொருள்கள், விலையில்லா வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 6 கோடியே 77 லட்சத்து 77 ஆயிரத்து 472 மதிப்பில் பொங்கல் பொருள்கள், விலையில்லா வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
விவசாயத்தை அடுத்து கிராம மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர்ந்து வேலை வாய்ப்பளிக்கவும், அதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை சென்ற 1983-ஆம் ஆண்டில் முதல்வர் எம்ஜிஆரால் தொடக்கிவைக்கப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் தரமான வேட்டி, சேலைகளை வழங்கிடும் நோக்கில் 2004 -ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையிலிருந்து பொதுமக்களுக்கு பாலிகாட் சேலைகளை வழங்க ஜெயலலிதா ஆணையிட்டார்.
அதன்படி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பொங்கல் திருநாளையொட்டி ரூ. 484.25 கோடி மதிப்பில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழகம் முழுதும் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரூ. 6 கோடியே 77 லட்சத்து 77 ஆயிரத்து 472 மதிப்பில் மாவட்டத்தில் உள்ள 6.05 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பொருள்களும், 5.37 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com