ஓய்வூதியதாரர் கவனத்துக்கு...

கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள்,  குடும்ப ஓய்வூதியர்கள் தங்களுக்கான வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள்,  குடும்ப ஓய்வூதியர்கள் தங்களுக்கான வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்: 
ஈரோடு மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜுன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச் சான்றிதழ் பெற்று கருவூலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்ய நடப்பு ஆண்டு முதல் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும்,  ஓய்வூதியர்கள் கருவூல அலுவலகத்துக்கு வரும்போது  ஓய்வூதியப் புத்தகம் மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதியப் புத்தகம், வங்கி சேமிப்புக் கணக்கு எண், ஆதார் அட்டை, பான் அட்டை, குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களுடன்  வாழ்வுச் சான்று படிவத்தை  இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.  இந்த வாழ்வு சான்று படிவத்தை ஓய்வூதிய வங்கி கணக்கு மேலாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்,  வட்டாட்சியர்,  துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் சான்று பெற்று அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் வெளிநாட்டிலுள்ள மாஜிஸ்திரேட்,   நோட்டரி,  வங்கி மேலாளார்  அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வு சான்று பெற்று சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.   வாழ்வு சான்று படிவத்தை இணைய தளத்திலிருந்து)  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து இணைய தள வழி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரத்தவறினாலோ, சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றிதழை அனுப்பத் தவறினாலோ 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பம் அளிக்காதவர்கள் அதற்கான விண்ணப்பத்தை கருவூலத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரியம்,  ரயில்வே துறை, அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com