மேல்நிலைத் தொட்டி அமைக்க வலியுறுத்தல்

ஈரோடு மாவட்டம்,  சித்தோடு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டுமென

ஈரோடு மாவட்டம்,  சித்தோடு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். 
இதுகுறித்து சித்தோடு, கன்னிமேடு பகுதி பொதுமக்கள் அளித்த மனு விவரம்:   
ஈரோடு மாவட்டம்,  சித்தோடு கன்னிமேடு பகுதியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை காலி இடத்தில் ஆதி திராவிட இனத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் 2 ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. அதில்  ஒன்று மட்டுமே தற்போது செயல்படுகிறது.  தற்போது இருக்கும் மேல்நிலைத் தொட்டி உடையும் நிலையில் உள்ளது.  மேலும்,  இப்பகுதியில் குடிநீர் தேவைக்காக அரை இஞ்ச் குழாய்  போடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரின் அளவு குறைவாக வருவதால்  75 குடும்பங்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது. 
குழாயில் தண்ணீர் வராத காலங்களில் 2 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டியுள்ளது. எனவே,  இப்பகுதியில் புதிய நேல்நிலைத் தொட்டி அமைத்து புதிய குடிநீர்க் குழாய் அமைக்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com