சமுதாய மறுமலர்ச்சி விழிப்புணர்வு ரதத்துக்கு ஈரோட்டில் வரவேற்பு

இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பிரம்மகுமாரிகள் அமைப்பின் இளைஞர் பிரிவு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாய விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு ஈரோட்டில் சனிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பிரம்மகுமாரிகள் அமைப்பின் இளைஞர் பிரிவு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுதாய விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு ஈரோட்டில் சனிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
பிரம்மகுமாரிகள் அமைப்பின் அகில இந்திய இளைஞர் பிரிவு ராஜயோகக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் புகழ்மிக்க பாரதத்தைப் படைத்திட இளைஞர்களைத் தயார்படுத்தும் இளைஞர் விழிப்புணர்வு கண்காட்சி ரதயாத்திரை நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
ஆக்கப்பூர்வத் தன்மையின் அடிப்படையில் இளைஞர்களை சமுதாயமாற்றத்தின் முன்னோடிகளாக ஆக்குவது, தூய்மையின் லட்சியத்தை மக்கள் பேணிக் காத்திடச் செய்வது, இளைஞர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலம் அறநெறிகளை கடைப்பிடிக்கச் செய்வது ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த விழிப்புணர்வு ரதயாத்திரை கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் குஜராத் மாநிலத்தில்லிருந்து பயணத்தைத் தொடங்கியது.
மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் முடித்த பிறகு இந்த விழிப்புணர்வு ரதம் சனிக்கிழமை ஈரோடு வந்தது. ஆட்சியரின் முகாம் அலுவலகப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் எஸ். பிரபாகர் விழிப்புணர்வு ரதயாத்திரையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, திண்டல், வேளாளர் கல்லுôரி, அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், வில்லரசம்பட்டி நான்கு சாலை ஆகிய பகுதிகளில் பயணம் செய்து நாமக்கல் மாவட்டம் நால்ரோடு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்த இந்த ரதத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைப் பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.
பின்னர், கண்காட்சி ரதம் நாமக்கல் மாவட்டத்துக்குச் சென்றது.
இது குறித்து விழிப்புணர்வு ரதயாத்திரை பொறுப்பாளர் பிரம்மகுமாரி உஷா கூறியதாவது: 2020ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல உள்ள இந்த ரத ஊர்தியில் 4 பிரம்மகுமாரிகள் உள்பட 11பேர் பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர். 10 நாள்களுக்கு ஒரு முறை பொறுப்பாளர்கள் சுழற்சிமுறையில் மாறி பயணம் செய்து பிரசாரம் செய்வார்கள்.
வேகமும், விவேகமும் நிறைந்த இளைஞர்களின் சக்தியை மேம்படுத்துதல், தேர்வு பயம் போக்குதல், மனஅழுத்தம் குறைத்தல், ஞாபகசக்தி அதிகரித்தல், மனசக்தியை மேம்படுத்துதல், புதைந்துள்ளத் திறமைகளை வெளியில் கொண்டுவருதல், நல்வழியில் வாழ்க்கையில் வெற்றி பெறுதல், பெண்களை மதித்து நடத்தல், பெண்களுக்கு உதவுதல் போன்ற விஷயங்கள் போதிக்கப்படுகிறது என்றார்.
இதில், ஈரோடு பிரம்மகுமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com