கொங்கு பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

ஈரோடு, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது

ஈரோடு, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, கல்லூரித் தாளாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.  
யுஆர்சி- குழுமங்களின் தலைவர் தேவராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கொங்கு பொறியியல் கல்லூரியின் கட்டடவியல் துறை இணைப் பேராசிரியர்  ராம்பிரதீப்,  துணை பேராசிரியர் சர்மிளா ஆகியோருக்கு இளம் பொறியாளர் விருதுகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் எஸ். குப்புசாமி,  துறைத் தலைவர் எஸ். அனந்தகுமார், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
மேலும்,  திருச்சி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(கட்டுமானத்துறை) சார்பில் நடத்தப்பட்ட  அகில இந்திய திடக்கழிவு மேலாண்மை போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் திவாகர், கெளதம், பாலாஜி ஆகியோரது படைப்பு (சிஓ2 செக்குவஸ்டர் புராஜெக்ட்) தேசிய விருதைப்பெற்றதற்காக  அவர்களுக்கும், வழிகாட்டி இணை பேராசிரியர் ராம்பிரதீப்புக்கும் கல்லூரி நிர்வாகத்தினரும், மாணவர்களும் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com