நீலகிரியில் 29, 30-ஆம் தேதிகளில்  ஆசிரியர் தகுதித் தேர்வு

நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் தகுதித் தேர்வுகள் ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறுமென  அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் தகுதித் தேர்வுகள் ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறுமென  அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது:
 தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் தகுதி தேர்வுகள் ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. அதன்படி, இதில் முதல் தாள் தேர்வு ஏப்ரல் 29-ஆம் தேதி குன்னூரில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியிலும், தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கூடலூரில் ஓவேலி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல, இரண்டாம் தாள் தேர்வு குன்னூரில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உதகையில் சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, பிரீக்ஸ் மேல்நிலைப் பள்ளி, ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளி, கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிரீன்வேலி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com