பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பொன்விழாவையொட்டி, ஆங்கிலத் துறை சார்பில் தடைகளைத் தகர்ப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பொன்விழாவையொட்டி, ஆங்கிலத் துறை சார்பில் தடைகளைத் தகர்ப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருதரங்கம் ஆப்பிரிக்கா,  அமெரிக்க இலக்கியங்களை மையப்படுத்தி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமெரிக்கா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் உரிய நைல்போர்ட் கலந்து கொண்டார்.
இதில் அவர் பேசுகையில்,  ஜேம்ஸ் பால்ட்வின்னின் ஆப்பிரிக்க,  அமெரிக்க மரணச் சடங்குகள் மற்றும் அங்கு நிலவும் வர்க்கப் பாகுபாடுகள் குறித்து விளக்கி கூறினார்.  பங்கேற்பாளர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் அமர்வில், தலித் இலக்கியம் குறித்து பேராசிரியர் பூர்ணவள்ளி,  அஜித் பிரசாத் ஆகியோர் அம்பேத்கர் மற்றும் காந்தி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு உரையாற்றினார்.
படுகர் இன மக்களின் இறப்புச் சடங்குகள், இசை குறித்து கல்லூரி மாணவியரால் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஆங்கிலத் துறைத் தலைவரான பேராசிரியர் ஷோபனா ராஜகுமாரி,  சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து,  தடைகளைத் தகர்ப்போம் என்ற தலைப்பில் பேசினார்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் ஷீலா கருத்தரங்கைத் தொடக்கிவைத்தார். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com