ஜிஎஸ்டி: தேயிலைத் தொழிலில் அமல்படுத்துவதில் உள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்ய வலியுறுத்தல்

தேயிலைத் தொழிலில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவது தொடர்பாக உள்ள குறைபாட்டை மத்திய அரசு நிவர்த்தி செய்யவேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி.தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தேயிலைத் தொழிலில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவது தொடர்பாக உள்ள குறைபாட்டை மத்திய அரசு நிவர்த்தி செய்யவேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி.தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் டி.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
மோடி தலைமையிலான மத்திய அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதரவாகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
ஒரேநாடு ஒரேவரி எனும் முழக்கத்துடன் சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலாக்கியுள்ளது.இதனால் சிறு,குறு விவசாயிகள், தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அரசுக்குச் சொந்தமான டான்டீ, கூட்டுறவுத் தொழிற்சாலைகள் ஏல மையத்தில் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தேயிலையைக் கொள்முதல் செய்து தேயிலைத் தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நீலகிரியில் 150 உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் தேயிலையைக் கொள்முதல் செய்யாமல் தவிர்த்து வருவதால் பச்சைத் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் சிறு விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால், நீலகிரியில் உள்ள கம்பெனி மற்றும் தனியார் தேயிலைத் தோட்டங்கள், அரசுத் தேயிலைத் தோட்டக் கழகம், சிறு தேயிலைத் தோட்டங்கள், கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளிட்ட  இடங்களில் பணிபுரியும் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மத்திய அரசு இதில் உள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com