உதகை, கோத்தகிரியில் ரூ. 1 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி பகுதிகளில் ரூ. 1 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி பகுதிகளில் ரூ. 1 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், உதகை அருகே உள்ள தூனேரி பகுதியில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிவறைகளையும், பில்லிக்கம்பை, ஒன்னதலை நடுநிலைப் பள்ளிகளில் ரூ. 5 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, கோத்தகிரியில் நெத்திகம்பை மொத்த விற்பனை பண்டக சாலையில் பொருள்களின் இருப்பு, தரத்தையும், சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புடியங்கி முதல் அரக்கொம்பை வரை ரூ. 45 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பணிகளையும், உள்கட்டமைப்பு இடை நிரவல் நிதி திட்டத்தின்கீழ் ஒன்னட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளையும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com