தேயிலைத் தோட்ட நிர்வாகங்களைக் கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

கேரள மாநிலத் தொழிலாளர்கள் பெறக்கூடிய சம்பளத்துக்கு இணையாக வால்பாறை பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் சம்பளம் வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி எம்.பி.

கேரள மாநிலத் தொழிலாளர்கள் பெறக்கூடிய சம்பளத்துக்கு இணையாக வால்பாறை பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் சம்பளம் வழங்க வலியுறுத்தி பொள்ளாச்சி எம்.பி. தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக நகரக் கிளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
அண்மையில் சென்னையில் அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தோட்ட நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், வால்பாறை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் கேரள மாநிலத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல இங்கும் தினக்கூலி ரூ. 315 வழங்கவேண்டும் என்று அரசுத் தரப்பில் வலியுறுத்தியும், ஊதியத்தை உயர்த்தி வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.
இதையடுத்து, தோட்ட நிர்வாகங்களைக் கண்டித்தும், கடந்த ஜூலை 5-ஆம் தேதி புதிய சம்பளம் ஒப்பந்தம் செய்தவர்களைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
வால்பாறை காந்திசிலை முன்பு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, அதிமுகவினர், தோட்டத் தொழிலாளர்கள் திரளாகப் பங்கேற்க உள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com