பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உதகையிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மாணவர் விடுதியில் மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

உதகையிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மாணவர் விடுதியில் மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
உதகை  ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட  பகுதிகளில்  மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை சார்பில் ரூ. 59.14 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலைப் பணி,  மாணவ,  மாணவியர் தங்கும் விடுதிகள்,  தாய்த் திட்டத்தின்கீழ் மந்துமல்வீடு பகுதியில்  ரூ. 29 லட்சம்  மதிப்பில்  15 கி.மீ. தூரத்துக்கு நடைபெற்று
வரும் சாலைப் பணி,  சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கி வரும் அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்,  ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி  ஆகியவற்றைப் பார்வையிட்ட ஆட்சியர் அங்கு மாணவர்களுக்கு  வழங்கப்படும் உணவுகளின் தரத்தையும்,  இருப்பிலிருந்த உணவுப் பொருள்களையும் ஆய்வு செய்தார்.
 இந்த ஆய்வின்போது,  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் முருகேசன்
உடனிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com