நீலகிரியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 30 ஆயிரம் அபராதம் வசூல்

நீலகிரி மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 30 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி ஒட்டுமொத்த கள ஆய்வு அனைத்து நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களால் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
இதற்காக குன்னூர் நகராட்சியில் 3 குழுக்களும், உதகை, நெல்லியாளம் நகராட்சிகளில் தலா 2 குழுக்களும், கூடலூர் நகராட்சி மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் தலா ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவினர் சுற்றுலா மற்றும் வெளியூர் வாகனங்களை ஆய்வு செய்து அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை கைப்பற்றினர்.
இந்த ஆய்வில் சுமார் 13 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு அவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ.30 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com