1 கிலோ முட்டைகோஸ் ரூ. 1-க்கு விற்பனை: பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள்

ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ. 1-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
1 கிலோ முட்டைகோஸ் ரூ. 1-க்கு விற்பனை: பொருளாதார நெருக்கடியில் விவசாயிகள்

ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ. 1-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் ஆறு, குளம், அணைகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. நகரப் பகுதிகள் மட்டுமின்றி பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளிலும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. வறட்சி அதிகரித்ததால் இத்தலார், முள்ளிகூர், நஞ்சநாடு ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தண்ணீர் போதுமான அளவு கிடைக்காததால் விவசாயிகள் பயிரிட்டிருந்த கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் மகசூல் குறையத் தொடங்கியது. மேலும், விளைபொருளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.  
இந்நிலையில், தற்போது அறுவடை செய்யப்படும் முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ. 1 மட்டுமே விலை கிடைப்பதால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, போர்த்தியாடா பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:
தண்ணீர் பற்றாக் குறையால் விவசாயத்துக்குத் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கையிருப்பில் இருந்த தண்ணீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் பயிர்கள் நீரின்றி கருகி வருகின்றன. மேலும், போதிய ஈரப்பதம் இல்லாததால் காய்கறிச் செடிகளில் பூச்சித் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளுக்குத்தான் அதிக விலை கிடைக்கிறது. எனவே, மலைப் பகுதி விவசாயிகளுக்கு விளைநிலங்களில் கிணறு தோண்டத் தேவையான நிதியாதாரத்தை வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com