உலக மக்கள் தொகை தினக் கருத்தரங்கு

குன்னூரில் உலக மக்கள் தொகை தினக் கருத்தரங்கு  சனிக்கிழமை நடைபெற்றது.

குன்னூரில் உலக மக்கள் தொகை தினக் கருத்தரங்கு  சனிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட இந்திய குடும்ப நலச் சங்கம் சார்பில்,  குன்னூர் ஆர்.கே. அறக்கட்டளை பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,  சங்க கிளை மேலாளர் வரதராஜன் தலைமை வகித்து பேசுகையில்,  "குடும்பக் கட்டுப்பாடு மனிதனை மகிழ்ச்சியாக வாழ உதவி செய்யும்.  உலக மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஆசியாவில் வசிக்கின்றனர். இதில் 20 சதவீதம் பேர் சீனாவிலும்,  17 சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர். மக்கள் தொகை வளர்ச்சியால் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுகிறது ‘ என்றார்.
கருத்தரங்கில்,  பயிற்சி மைய இயக்குநர் லீலாகிருஷ்ணன் வரவேற்றார். சங்க திட்ட அலுவலர் ராஜேஷ்  நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com