உதகை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: ஜூன் 5-இல் தொடக்கம்

உதகை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி தொடங்குகிறது.

உதகை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி தொடங்குகிறது.
 இதுதொடர்பாக உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் கு.சுந்தரவள்ளி தெரிவித்துள்ளதாவது:
 உதகை அரசு கலைக் கல்லூரியில் 2017-18 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப் பிரிவுகளில் இளம் அறிவியல், இளம் வணிகவியல் பாடப் பிரிவுகளுக்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5-ஆம் தேதி காலை 11 மணி முதல் நடைபெறும்.
 இக்கலந்தாய்வு தமிழ், ஆங்கிலம் பாட மதிப்பெண் தவிர எஞ்சியுள்ள நான்கு பாடங்களில் 800 மதிப்பெண்களுக்கு மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.
 5-ஆம் தேதி காலை சிறப்பு ஒதுக்கீட்டில் தமிழ் பிரிவில் 200-க்கு 176 முடியவும், ஆங்கிலப் பிரிவில் 200-க்கு 165 முடியவும், 6-ஆம் தேதி காலையில் 800-க்கு 798 முதல் 654 வரையிலும், பிற்பகலில் 653 முதல் 585 வரையிலும், 7-ஆம் தேதி காலையில் 800-க்கு 585 முதல் 541 வரையிலும், பிற்பகலில் 540 முதல் 495 வரையிலும், 8-ஆம் தேதி காலையில் 494 முதல் 450 வரையிலும், பிற்பகலில் 449 முதல் 401 வரையிலும், 9-ஆம் தேதி காலையில் 800-க்கு 400 முதல் 348 வரையிலும், பிற்பகலில் 800-க்கு 348-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com