நீலகிரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுரை

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால், பேரிடர்க் காலங்களில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென, மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால், பேரிடர்க் காலங்களில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென, மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் வரை பெய்யவுள்ள வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நிலச்சரிவு,  மரம் விழுதல்,  வெள்ள அபாயம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால்,  தங்களது வீடு உறுதியாக கட்டப்பட்டுள்ளதா என்பதை அறிந்து குடியிருக்க வேண்டும்.  
பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதியில் இருந்தால் அருகிலுள்ள நிவாரண மையத்தில் தங்க வேண்டும். நிவாரண மையங்களுக்குச் செல்லும் வழிகள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.  பேரிடர் தொடர்பாக அறிவிக்கப்படும் செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அத்தியாவசியப் பொருள்களுடன் அவசரகாலப் பெட்டியை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.  கருவுற்ற பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  பேரிடர்க் காலங்களில் மின் சாதனங்களையும்,  மின் இணைப்பையும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவிலும் பரவலாக நல்ல மழை பெய்தது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோத்தகிரியில் 51 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.  மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விபரம் (மி.மீ.):
குன்னூர், கொடநாடு- 39, குந்தா- 31, உதகை- 30.2, கெத்தை- 30, பர்லியாறு- 27,  கிண்ணக்கொரை- 20,  கிளன்மார்கன், அவலாஞ்சி- 17,  கல்லட்டி,  எமரால்டு,  கேத்தி- 14, நடுவட்டம்- 13, அப்பர் பவானி- 11,  கூடலூர்,  தேவாலா- 3.
செவ்வாய்க்கிழமை  இரவிலிருந்து குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. உதகையிலும் சாரல் மழை காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com