ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியன் விளக்கக் கூட்டம்

ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியன் சார்பில் கூடலூரில் புதன்கிழமை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

ரெப்கோ வங்கி டெலிகேட்ஸ் யூனியன் சார்பில் கூடலூரில் புதன்கிழமை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
ரெப்கோ வங்கியின் டெலிகேட்ஸ் யூனியன் தாயகம் திரும்பிய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், வீடமைப்பு, விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும், மகளிர் குழுக்களுக்கான கடனுதவி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சித் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இக்கூட்டத்துக்கு அமைப்பின் தென்னிந்தியத் தலைவர் சு.ஆனந்தராஜா தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் கே.கிருஷ்ண பாரதியார், மாவட்டத் தலைவர் பி.எஸ்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரெப்கோ வங்கியின் இயக்குநர்கள் எல்.முனீஸ்வர் கணேசன்,பி.மகாலிங்கம் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். பேரவைப் பிரதிநிதிகள் வேலு ராஜேந்திரன், எம்.பரமசிவம், யோகராஜா, வீ.லோகநாதன், இதயராஜா, நடராஜ், ராமேஸ்வரன் உள்ளிட்டோர் பேசினர்.  இதில், உறுப்பினர்கள் மற்றும் தாயகம் திரும்பியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com