உதகை அருகே போலி மருத்துவர் கைது

உதகை அருகே எமரால்டு கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைஅளித்து வந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

உதகை அருகே எமரால்டு கிராமத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைஅளித்து வந்த போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் இல்லையென்றாலும் வெளி மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று வருவோர்அங்கு டெங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர். பின்னர், அவர்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் வருகையில் இங்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, டெங்கு காய்ச்சல் தொடர்பாக அனைத்துப் பகுதிகளிலும் தீவிர ஆய்வு நடத்த நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் ரகுபாபு தலைமையில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எமரால்டு பகுதியில் ஆய்வு நடைபெற்றபோது அங்கு ஜெயபிரகாஷ் என்பவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வருவதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அதிகாரிகள் குழுவினர்அங்கு ஆய்வுக்காகச் சென்றபோது ஜெயபிரகாஷ் அக்குபஞ்சர் படித்துவிட்டு மருத்துவர் எனக் கூறி அங்கு நோயாளிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஜெயபிரகாஷை சுகாதாரத் துறை அலுவலர்கள் எமரால்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் அளித்தனர்.
ஜெயபிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவரது அறையில் வைத்திருந்த மருந்து, மாத்திரைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com