பழங்குடி மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட காவல் துறை ஏற்பாடு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி வனப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நீலகிரி காவல் துறை சார்பில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி வனப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நீலகிரி காவல் துறை சார்பில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா உத்தரவின்பேரில் ஓவேலி பேரூராட்சியில் உள்ள நியூஹோப் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட எல்லமலை குறும்பர்பாடி பழங்குடி கிராமத்தைச் சுற்றியுள்ள முள்புதர்களை காவல் துறையினர் அகற்றினர். கிராமத்தற்குச் செல்லும் சாலையையும் சீரமைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் நிறைவாக அந்த வனப் பகுதியில் உள்ள சுமார் 200 பழங்குடி குடும்பத்தினருக்கு தீபாவளி கொண்டாட புத்தாடைகள், உணவு, பாத்திரங்கள், கம்பளி உள்ளிட்டவற்றை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு, கூடலூர் டி.எஸ்.பி. ரவிசங்கர் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூடலூர் காவல் ஆய்வாளர் சக்திவேல், மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் அமைச்சுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், லாரன்ஸ், உதவி ஆய்வாளர் ராஜாமணி, மோகன் தாஸ் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com