குன்னூரில் ராணுவ மலையேற்றப் போட்டி

குன்னூர் ராணுவ முகாமில் இந்திய அளவிலான ராணுவ மலையேற்றப் போட்டி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

குன்னூர் ராணுவ முகாமில் இந்திய அளவிலான ராணுவ மலையேற்றப் போட்டி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் செயற்கை மலை வடிவமைக்கப்பட்டு, ராணுவ மலையேற்றப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய ராணுவத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ராணுவ வீரர்கள் பல குழுக்களாக கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு குழுவிலும் 6 வீரர்கள் கலந்துகொண்டு விரைவாக செயல்படுதல், முதலில் லட்சியத்தை அடைவது, கடினமான பாதையில் ஏறுவது என 3 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு இந்திய ராணுவத்தின் தலைமைப் பயிற்சி அதிகாரி மேஜர் ஜெனரல் குர்பிரித்சிங் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
போட்டியின் ஒரு பகுதியில் நடைபெற்ற செண்டை மேளம், வாள் சண்டை, கத்திச் சண்டை, வாள் வீச்சு, சுருள் சுற்றுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்த மலையேறும் விளையாட்டு 2020-இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com