தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுப் பேரணி

குன்னூர் கன்டோண்மென்ட் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குன்னூர் கன்டோண்மென்ட் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குன்னூர் மானெக்ஷா சிலை முன்பு தொடங்கிய இப்பேரணியை, மாநிலங்கவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன் தொடக்கிவைத்தார். இதில், கன்டோண்மென்ட் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி பள்ளி மாணவிகளின் குறு நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்டோண்மென்ட் முதன்மை அதிகாரி ஹரிஷ் வர்மா பேசியதாவது:
திறந்தவெளியில் மலம் கழிப்பது நூறு சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டதால், மத்திய அரசு சார்பில் வெலிங்டன் கன்டோண்மென்டுக்கு பாராட்டுச் சான்று கிடைத்துள்ளது. ஒவ்வொரு வார்டிலும் தூய்மையைக் காப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அக்டோபர் 2-ஆம் தேதி வரை கன்டோண்மென்ட்டில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தூய்மையை வலியுறுத்தி தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்படும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் கன்டோண்மென்ட் நிர்வாகம் தன்னிறைவு அடைந்து வருகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கன்டோண்மென்ட் உள்ளிட்ட பகுதிகளைத் துய்மையாக வைப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com