பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல்: பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவியர் சிறப்பிடம்

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவிகள், பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவிகள், பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் பகுதிகளில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதில், பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தேர்வுகளில் தரவரிசைப் பட்டியலில், பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவியர் இடம்பிடித்துள்ளனர்.
தாவரவியல் துறையில் மாணவி பிரக்யா விஸ்வகர்மா முதலிடமும் , ஆரத்தி வர்மா 2-ஆம் இடமும், கௌதமி 5-ஆம் இடமும் ,
டில்னா சி ஆண்டனி 6-ஆவது இடமும், சௌமியா 7-ஆம் இடமும் , சுலோக்சனா 8-ஆவது இடமும், லோகேஷ்வரி 9-ஆம் இடமும் பிடித்துள்ளனர். பொருளாதாரத் துறையில் 2-ஆவது இடத்தை ஜெயந்தி, 10-ஆவது இடத்தை ஷீமா ஆகியோர் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு, கல்லுரி முதல்வர் ஷீலா, பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com