கறவை மாடுகள் பராமரிப்புப் பயிற்சி

உதகை அருகேயுள்ள தட்டனேரி கிராமத்தில் கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

உதகை அருகேயுள்ள தட்டனேரி கிராமத்தில் கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
உதகையிலுள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் ஆகியவை இணைந்து கிராமப்புறத் தொழில்முனைவோர் முன்னேற்ற களபயிற்சிப் பட்டறை முகாமை நடத்தி வருகின்றன. வரும்  22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்முகாமின் ஒரு பகுதியாக தட்டனேரி கிராமத்தில் கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி  முகாம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
தட்டனேரி கிராம தலைவர் துரை தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் பயிற்சி பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மகேஷ்வரி,  துணைப் பேராசிரியர் தனபாக்கியம்,  தட்டனேரி பால் பண்ணை செயலர் விமலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இம்முகாமில் பங்கேற்ற  கால்நடை மருத்துவர் சைலேந்திர குமார்,  மாடுகள் பராமரிப்பு மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினார். விவசாயிகளின் கோரிக்கைக்கேற்ப அக்டோபர் மாதத்தில் தட்டனேரி கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுமெனவும் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com