குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி  தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி  தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நூறாண்டு பழமை வாய்ந்த இந்தக் கோயில் தேர்த் திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. 
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  துருவம்மன் கோயிலிலிருந்து தேரோட்டம் துவங்கியது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதி வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் கும்மியாட்டம்,  பொய்க்கால் குதிரை கரகாட்டம்,  ஒயிலாட்டம் உள்ளிட்ட  நிகழ்ச்சிகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. விழாவில்,  குன்னூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்காண பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com