சுதந்திர தினத்தை முன்னிட்டு மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் சார்பில் மாரத்தான் போட்டி

வெலிங்டன் ராணுவ முகாம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி குன்னூர் தங்கராஜ் ராணுவ மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.


வெலிங்டன் ராணுவ முகாம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி குன்னூர் தங்கராஜ் ராணுவ மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தையொட்டி மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் எனப்படும் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 14 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டர்.
மொத்தம் 2.4 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற போட்டியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ராணுவ வீரர்களும் கலந்து கொண்டனர்.
ராணுவத்தில் இளைஞர்கள் சேரும் வகையில் உற்சாகத்தை ஏற்படுத்தவும், உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது
என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் பி.ஷான் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் சரோஜினி முதலிடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com