நீலகிரியில் 27 ரிசார்ட் வளாகங்களுக்கு சீல் வைக்கும் பணி இன்று தொடக்கம்: ஆட்சியர் தகவல்

சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள யானை வழித்தட நிலங்களில் செயல்பட்டு வரும் 27 தனியார் ரிசார்ட் வளாகங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 12) காலை 10 மணிக்கு தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானை வழித்தட நிலங்களாக கண்டறியப்பட்டுள்ள சுமார் 6,000 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்பு பகுதிகளுக்கென அனுமதியை பெற்று விட்டு வணிக நோக்கிலான ரிசார்ட்டுகளாக நடத்தி வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அதில் யானை வழித்தட நிலங்களில் உள்ள கட்டடங்களுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து அந்த 27 ரிசார்ட் வளாகங்களுக்கும் 48 மணி நேரம் அவகாசம் அளித்து நோட்டீஸ் கொடுக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பணிகள் தொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்ததாவது:யானை வழித்தட நிலங்களில் உள்ள கட்டடங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து 27 தனியார் ரிசார்ட் வளாகங்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) காலை 10 மணி முதல் அந்த 27 ரிசார்ட் வளாகங்களுக்கும் சீல் வைக்கும் பணி நடைபெறும். இதற்காக 2 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் உள்ளாட்சித் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினரின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெறும்.அதேபோல, மொத்தமுள்ள 39 ரிசார்ட் வளாகங்களில் எஞ்சியுள்ள 12 ரிசார்ட் வளாகங்களின் உரிமையாளர்கள் தங்களிடம் ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்திருந்ததை அடுத்து அந்த ஆவணங்களை சரிபார்க்கும் பணி சனிக்கிழமை மாலை வரை நடைபெற்றன. இதில் 11 ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தங்களது ஆவணங்களைக் காட்டியுள்ளனர். இருப்பினும் அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்தும், உண்மை நிலவரம் குறித்தும் ஞாயிற்றுக்கிழமை நேரடி ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வு முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 24 மணி நேரம் அவகாசமளிக்கப்படும். அதன்பின்னர் ஆவணங்களின் தன்மையை வைத்து அந்த 12 ரிசார்ட் வளாகங்களுக்கும் சீல் வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள யானை வழித்தட நிலங்களில் செயல்பட்டு வரும் 27 தனியார் ரிசார்ட் வளாகங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 12) காலை 10 மணிக்கு தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சீகூர் பள்ளத்தாக்குப் பகுதியில் யானை வழித்தட நிலங்களாக கண்டறியப்பட்டுள்ள சுமார் 6,000 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்பு பகுதிகளுக்கென அனுமதியை பெற்று விட்டு வணிக நோக்கிலான ரிசார்ட்டுகளாக நடத்தி வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அதில் யானை வழித்தட நிலங்களில் உள்ள கட்டடங்களுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அந்த 27 ரிசார்ட் வளாகங்களுக்கும் 48 மணி நேரம் அவகாசம் அளித்து நோட்டீஸ் கொடுக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பணிகள் தொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்ததாவது:
யானை வழித்தட நிலங்களில் உள்ள கட்டடங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அடுத்து 27 தனியார் ரிசார்ட் வளாகங்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) காலை 10 மணி முதல் அந்த 27 ரிசார்ட் வளாகங்களுக்கும் சீல் வைக்கும் பணி நடைபெறும். இதற்காக 2 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் உள்ளாட்சித் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் மற்றும் வனத் துறையினர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினரின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெறும்.
அதேபோல, மொத்தமுள்ள 39 ரிசார்ட் வளாகங்களில் எஞ்சியுள்ள 12 ரிசார்ட் வளாகங்களின் உரிமையாளர்கள் தங்களிடம் ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்திருந்ததை அடுத்து அந்த ஆவணங்களை சரிபார்க்கும் பணி சனிக்கிழமை மாலை வரை நடைபெற்றன. இதில் 11 ரிசார்ட்டுகளின் உரிமையாளர்கள் தங்களது ஆவணங்களைக் காட்டியுள்ளனர். இருப்பினும் அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்தும், உண்மை நிலவரம் குறித்தும் ஞாயிற்றுக்கிழமை நேரடி ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வு முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு 24 மணி நேரம் அவகாசமளிக்கப்படும். அதன்பின்னர் ஆவணங்களின் தன்மையை வைத்து அந்த 12 ரிசார்ட் வளாகங்களுக்கும் சீல் வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com